Saturday, June 5, 2021

அமைச்சுப் பணியாளர்கள் முதுநிலை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறும் அரசாணையை உச்சநீதிமன்றம் சென்றேனும் தடுத்து நிறுத்துவோம் ஐயா மாயவன் ஆவேசம்


இன்று 05.06.21 தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செயற்குழு கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனர்  ஐயா மாயவன் அவர்கள் மாநில நிர்வாகக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பற்றி எடுத்துரைத்தார் ,குறிப்பாக அமைச்சுப் பணியாளர்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறும் அரசாணையை உச்ச நீதிமன்றம் சென்றேனும் தடுத்து நிறுத்துவோம் என்று ஆவேசமாக பேசினார் .பட்டதாரி ஆசிரியர்களை பாதிக்கும் இந்த அரசாணையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறினார்.

🌐அதுபோல 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்ய வேண்டுமென்றும் மாணவர்களின் உயிர் தான் முக்கியம் உயிரை பணயம் வைத்து பொதுத் தேர்வு நடத்த வேண்டாம் என்றும் பொதுத் தேர்வு நடத்தாமல் மதிப்பெண் எப்படி வழங்குவது என்பது பற்றி கல்வியாளர்கள் உடன் கலந்து பேசி முடிவு எடுக்கலாம் என்றும் கூறினார்.

கொரோனா வில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட நமது கழகம் சார்பாக நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.


மேலும் 

மாநிலத் தலைவர்

மாநில பொதுச் செயலாளர்

மாநில பொருளாளர்

மற்றும் அனைத்து மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர்.

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Friday, March 12, 2021

TNHHSSGTA - சாதனைகள்

 🌷🌷🌷🌷🌷🌷🌷

*வெற்றி மீது வெற்றி* *வந்து நம்மை சேரும் இதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் போராளி மாயவன் அவர்களைச் சேரும்

*பட்டதாரி ஆசிரியர்களின் விழிப்புணர்வுக்கான பதிவு* 


தயவு செய்து படித்து புரிந்து கொண்டு 

ஆதரவு தாரீர்!!


*🙏அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களுக்காக மட்டும் தனியாக இயங்கக்கூடிய "ஒரே இயக்கம் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் மட்டுமே".*


*🙏மற்ற சங்கங்களின் பெயர்களை படித்து பாருங்கள்.*


🙏 *இம் மாதம்* *ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெற இருந்த தேர்தல் பயிற்சி வகுப்புகளை ரத்து செய்தது நமது சங்கம்* 


🙏 *பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடத்தக் கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் 31ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க ஆணை பெற்றது நமது சங்கம்*.


🙏 *2019 ஆம் ஆண்டு ஏழாவது ஊதியக் குழுவின் ஊதிய உயர்வை மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து பெற்றுக் கொடுத்தது நமது சங்கம்*.


*🙏கொரோனா உச்சத்தில் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் நிறுவனர் அ. மாயவன், மாநிலத் தலைவர் எஸ். பக்தவச்சலம், சென்னை மாவட்ட நிர்வாகிகள் சாந்தகுமார், சீனிவாசன், தமிழ்வாணன், தலைமை நிலைய செயலாளர் சாரதி, ராஜேஷ், மாநில சட்ட செயலாளர் சாமி, மாவட்ட தலைவர் கி. ஜெயராமன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கே ஆர். வெங்கடேசன் ஆகியோர் போராடி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து அரசாங்கத்தையே ஆட்டிப்படைத்து ரத்து செய்ய வைத்தது நமது சங்கம்.*


*🙏ஒரு நபர் ஊதியக் குழுவிடம் வாதாடி, போராடி மத்திய அரசுக்கு இணையாக பட்டதாரி ஆசிரியர்களுக்கு  ஊதிய உயர்வை பெற்றுக் கொடுத்து கௌரவித்தது நமது சங்கம்.*


🙏 *சிபிஎஸ் -யை ரத்து செய்வதற்காக சென்னை கடற்கரையில்  மூன்று நாள் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டது நமது சங்கம்*.


🙏 *எம்.பில். ஊக்க ஊதியம் 21.3.2013 நாளில் இருந்துதான் பெற வேண்டும் என்ற கல்வித்துறை செயலாளர் திருமதி.சபீதா அவர்களின் ஆணைக்கு தடை உத்தரவு பெற்றது நமது சங்கம்*.


🙏 *ஆங்கில மொழிப் பாடத்திற்கு என தனியாக பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வைத்தது நமது சங்கம்*.


🙏 *ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடத்தில் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வைத்தது நமது சங்கம்*.


🙏 *E L -யை 17 நாட்களாக உயர்த்தியது நமது சங்கம்.* 


🙏 *ஆசிரியர்கள் அனைவரும் தேர்தல் நேரத்தில் வாக்களிப்பதற்காக தனி மையத்தை ஏற்படுத்த வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது நமது சங்கம்*.


*🙏சனிக்கிழமை வேலை நாட்களை ரத்துசெய்ய* *கோரிக்கை விடுத்து* *இருப்பதும் அதை ரத்து செய்ய முயற்சிகள்* *மேற்கொண்டு வருவதும் நமது சங்கம்*

*விரைவில் ரத்தாகும்.*


*🙏ஆசிரியர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள கட்டாயப்படுத்தக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருவதும் நமது சங்கம்*.


🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

Thursday, March 4, 2021

FLASH NEWS- தேர்தல் பயிற்சி வகுப்பு தேதி மாற்றம்

 _*தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக கோரிக்கைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி*_


 *ஓய்வறியா உழைப்பாளி அ.மாயவனின் இன்றைய சரித்தர சாதனை- ஆசிரியர் நலனுக்காக* 


தேர்தல் பயிற்சி வகுப்புகளை ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து  பிற நாட்களில் வைக்க வேண்டும் என *நிறுவனர். Dr.அ.மாயவன்* அவர்கள், மாநிலத் தலைவர் *திரு.சு.பக்தவச்சலம்* அவர்கள், மற்றும் தலைமை நிலையச் செயலர் திரு.விஜயசாரதி அவர்கள் மற்றும் சென்னை மாவட்ட தலைவர் திரு.சாந்தகுமார் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் *மாநில தலைமை தேர்தல் ஆணையரை* சந்தித்து முறையிட்டனர். அதை ஏற்றுக்கொண்ட *மாநில தேர்தல் ஆணையர்* இன்று பயிற்சி வகுப்பு *ஞாயிறு தவிர்த்து* அட்டவணை

 பிறப்பித்துள்ளார்.



 *என்றும் ஆசிரியர்-மாணவர் நலனில்*

TNHHSSGTA

VIRUDHUNAGAR

அமைச்சுப் பணியாளர்கள் முதுநிலை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறும் அரசாணையை உச்சநீதிமன்றம் சென்றேனும் தடுத்து நிறுத்துவோம் ஐயா மாயவன் ஆவேசம்

இன்று 05.06.21 தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செயற்குழு கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் ப...