இன்று 05.06.21 தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செயற்குழு கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனர் ஐயா மாயவன் அவர்கள் மாநில நிர்வாகக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பற்றி எடுத்துரைத்தார் ,குறிப்பாக அமைச்சுப் பணியாளர்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறும் அரசாணையை உச்ச நீதிமன்றம் சென்றேனும் தடுத்து நிறுத்துவோம் என்று ஆவேசமாக பேசினார் .பட்டதாரி ஆசிரியர்களை பாதிக்கும் இந்த அரசாணையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறினார்.
🌐அதுபோல 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்ய வேண்டுமென்றும் மாணவர்களின் உயிர் தான் முக்கியம் உயிரை பணயம் வைத்து பொதுத் தேர்வு நடத்த வேண்டாம் என்றும் பொதுத் தேர்வு நடத்தாமல் மதிப்பெண் எப்படி வழங்குவது என்பது பற்றி கல்வியாளர்கள் உடன் கலந்து பேசி முடிவு எடுக்கலாம் என்றும் கூறினார்.
கொரோனா வில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட நமது கழகம் சார்பாக நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
மேலும்
மாநிலத் தலைவர்
மாநில பொதுச் செயலாளர்
மாநில பொருளாளர்
மற்றும் அனைத்து மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர்.
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
No comments:
Post a Comment