Thursday, October 18, 2018

9ம் வகுப்பு முப்பருவ கல்வி முறையில் மாற்றம் வருமா?

  முப்பருவக் கல்விமுறையில் மாற்றம் செய்வது குறித்து பள்ளிக்கல்வித்துறை தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் பாடப்புத்தகங்கள் பொதுவாக 5 வருடங்களுக்கு ஒருமுறை திருத்தியமைக்கப்படுகின்றன. அரசால் நியமிக்கப்பட்ட உயர்மட்டக் குழுவால் பாடத்திட்டம் முடிவு செய்யப்படுகிறது. 

பல்வேறு துறை வல்லுநர்களும் பல்வேறு வகுப்பிற்கான பாடத்திட்டத்தினை வரைவு செய்கின்றனர். ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியாக, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், பாட வல்லுநர்கள் மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்கள் அந்தந்தப் பாடங்களுக்குரிய நூல்களை எழுதுகின்றனர். 



இந்நிலையில் முதல்வராக ஜெயலலிதா இருந்த போது, சட்டப்பேரவையில் மாணவர்களின் பாடச்சுமையை குறைப்பதற்காக முப்பருவ கல்வி முறையும், தொடர் மதிப்பீட்டு முறையும் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்தார். 


மேலும் 1 முதல் 8 ம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கு 2012-2013ம் வருட கல்வியாண்டில் முப்பருவ கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2013-2014ம் ஆண்டு முதல் முப்பருவக் கல்விமுறை 9 ம் வகுப்பிற்கும் விரிவு படுத்தப்பட்டது. இந்த முறையின் அடிப்படையில் மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பாடப்புத்தங்கள் எழுதும் பணிகள் கடந்த ஆண்டு துவக்கப்பட்டு, இந்த கல்வியாண்டில் 1,6,9,11 ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடப்புத்தகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டில் 2,3,4,5,7,8,10,12 ஆகிய வகுப்புகளுக்கு புதியப் பாடப்புத்தகம் எழுதும் பணிகள் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்று வருகிறது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரியிடம் கேட்டபோது, 

'பாடத்திட்டத்தை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட கலைத்திட்ட குழுவின் கூட்டத்தில் , தற்பொழுது 9ம் வகுப்பிற்கு உள்ள முப்பருவக் கல்விமுறையை மாற்றி 10 வகுப்பில் உள்ளது போல் ஒரே புத்தகமாக வழங்கலாம் என தெரிவித்துள்ளனர். 

மாணவர்கள் 8ம் வகுப்பு வரையில் தொடர் மதிப்பீட்டு முறையில் பயின்று வருகின்றனர். அது மட்டுமின்றி ஒவ்வொரு பருவத்திற்குரிய தேர்வு பாடங்களை மட்டும் படித்து தேர்வு எழுதிய பின்னர், 10ம் வகுப்பில் தொடர்ந்து படித்து தேர்வு எழுதுவதால் சிரமப்படுகின்றனர். எனவே 9ம் வகுப்பில் முப்பருவ கல்விமுறையை மாற்றலாம் என கூறியுள்ளனர். 


இது குறித்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பள்ளிக்கல்வித்துறைக்கு பரிந்துரைத்துள்ளது. இது குறித்து பொதுக்கல்வி வாரியத்தின் கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்' என்றார்.

மேலும், தமிழகத்தில் முதல்வராக ஜெயலலிதா இருந்து போது அறிமுகப்படுத்தப்பட்ட 9 ம் வகுப்பு முப்பருவமுறை திட்டம் வரும் கல்வியாண்டு முதல் மாற்றப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
TNHHSSGTA
VIRUDHUNAGAR

Tuesday, September 4, 2018

NTSE - 06.09.2018 முதல் online பதிவு செய்யலாம்

NTSE - தேர்வெழுத விரும்பும் மாணவர்களின் விவரங்களை 6.09.18 முதல் 15.9. 18 வரை பதிவு செய்யலாம் .

Wednesday, August 22, 2018

22.08.2018 TNHHSSGTA VIRUDHUNAGAR, பொதுக்குழு கூட்டம்.

 இன்று நமது கழக பொதுக்குழு கூட்டம் திரு.விஜயபாலன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. பொதுக்குழுவில் நிறுவனர் அய்யா மாயவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
* அய்யா மாயவன் அவர்களது உரையில் நமது கழக உறுப்பினர்கள் தான் கழகத்தின் ஆணிவேர்கள் அவர்களது இல்ல விழாக்களில் நிர்வாகிகள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்றும்.
* விருதுநகர் மாவட்டத்தில் இருந்து அகில இந்திய மகளிர் மாநாட்டில் கலந்து கொள்ள ஒரு ஆசிரியைக்கு அனுமதி பெறப்படும் என்றும் கூறினார்.
* மேலும் நமது கழகத்தின் சார்பாக விருதுநகரில் கட்ட இருக்கும் கழக கட்டட நிதிக்கு ரூ.500 அளித்து சிறப்பாக கட்டடப் பணியை முடித்திட வாழ்த்துக்களை தெரிவித்தார்.
* பொதுக்குழு கூட்டத்திற்கு முன்பு திருவில்லிபுத்தூர் வட்டாரத்
 தலைவர் திரு. பாலமுருகன் இல்ல விழாவில் பங்கேற்று வாழ்த்தினார்.
 TNHHSSGTA
VIRUDHUNAGAR



அமைச்சுப் பணியாளர்கள் முதுநிலை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறும் அரசாணையை உச்சநீதிமன்றம் சென்றேனும் தடுத்து நிறுத்துவோம் ஐயா மாயவன் ஆவேசம்

இன்று 05.06.21 தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செயற்குழு கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் ப...