Tuesday, April 3, 2018

500 பள்ளிகளில் விஞ்ஞான அறிவியல் ஆய்வுக்கூடம் - அமைச்சர் செங்கோட்டையன் தகவல் ..

500 பள்ளிகளில் விஞ்ஞான அறிவியல் ஆய்வுக்கூடம் - அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த காவேரிபாளையத்தில்அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:


மத்திய அரசுடன் இணைந்து முதல் கட்டமாக 500 பள்ளிகளில் விஞ்ஞான அறிவியல் ஆய்வுக்கூடம் அமைக்கப்பட உள்ளது. இந்த ஆய்வகத்தில் பயிற்சி அளிக்கவுள்ள 500 ஆசிரியர்களுக்கு,அமெரிக்க பேராசிரியர்கள் பயிற்சி அளிக்கவுள்ளனர்.கோடை விடுமுறை முடிந்து, பள்ளி திறந்த உடன் மாற்றம் செய்யப்பட்ட புதிய சீருடைகள் மாணவர்களுக்கு வழங்கப் படும்.
 நலிந்த பிரிவினருக்கு தொடக்கநிலை வகுப்புகளில், 25 சதவீத இடஒதுக்கீட்டை கடைபிடிக்காத தனியார் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த புதிய பாடத்திட்ட புத்தகங்கள் பள்ளி திறக்கும் நாட்களிலேயே மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றார்

No comments:

Post a Comment

அமைச்சுப் பணியாளர்கள் முதுநிலை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறும் அரசாணையை உச்சநீதிமன்றம் சென்றேனும் தடுத்து நிறுத்துவோம் ஐயா மாயவன் ஆவேசம்

இன்று 05.06.21 தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செயற்குழு கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் ப...