Thursday, April 5, 2018

அரசுப் பள்ளியில் பசுமைப் படை அமைத்த ஆசிரியர்.

அரசுப்பள்ளியில் பசுமைப்படை அமைத்த ஆசிரியர்


பசுமைத்தலைமையாசிரியர் திரு அ.சீ.செந்தில்குமார் அவர்கள் தலைமையில்.

மார்ச் 20உலகச் சிட்டுக்குருவிகள் தினம்.

மார்ச் 21 உலகக்காடுகள் தினம்.

 மார்ச் 22 உலகத்தண்ணீர்தினம்.

வரும் ஏப்ரல் 22 உலக பூமி தினம்








அனைத்தையும் முன்னிட்டு எங்கள் பள்ளி  ஆசிரியர்கள் மாணவர்கள் மாணவிகள். பொதுமக்களுக்கும் 300 கன்றுகள் தலைமையாசிரியர் மற்றும் பள்ளியின் அனைத்து ஆசிரியர்கள், அலுவலக நண்பர்கள் என அனைவரையும்  வழங்கக்கூறினேன். மகிழ்வுடன் வழங்கினார்கள். பள்ளியின் ஆரம்பத்தில் மாணவர்களின் பிறந்தநாள்களுக்கு கன்றுகள் வழங்கிவந்தேன். இடையில் தண்ணீர் பிரச்சினையால் கன்றுகளை வாங்கி வைக்க இயலவில்லை தற்போது மொத்தமாக இந்நாட்களை நினைவுகூறும் வகையில் வழங்கினேன் உங்கள் வாழ்த்துக்களோடு ஆனையூரில் மேலும் பசுமை தழைக்கட்டும். வழங்கப்பட்ட கன்றுகளில் 1. கொய்யா, பலா, நெல்லி இரண்டுவகை, நாவல், எலுமிச்சை என பழவகைகளையே வழங்கினேன். பழங்கள் என்றால் நல்ல ஆர்வமாக வளர்ப்பார்கள் என்ற நோக்கமும் பறவைகளுக்கும் அணில்போன்ற உயிர்கள் அழியாமல் உணவுகிடைக்கவும் இந்த செயலை மேற்கொண்டேன்.

+2 பொதுத் தேர்வு நாளையுடன் முடிவடைகின்றது.


Tuesday, April 3, 2018

அரசுப் பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமிக்க முடிவு .


500 பள்ளிகளில் விஞ்ஞான அறிவியல் ஆய்வுக்கூடம் - அமைச்சர் செங்கோட்டையன் தகவல் ..

500 பள்ளிகளில் விஞ்ஞான அறிவியல் ஆய்வுக்கூடம் - அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த காவேரிபாளையத்தில்அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:


மத்திய அரசுடன் இணைந்து முதல் கட்டமாக 500 பள்ளிகளில் விஞ்ஞான அறிவியல் ஆய்வுக்கூடம் அமைக்கப்பட உள்ளது. இந்த ஆய்வகத்தில் பயிற்சி அளிக்கவுள்ள 500 ஆசிரியர்களுக்கு,அமெரிக்க பேராசிரியர்கள் பயிற்சி அளிக்கவுள்ளனர்.கோடை விடுமுறை முடிந்து, பள்ளி திறந்த உடன் மாற்றம் செய்யப்பட்ட புதிய சீருடைகள் மாணவர்களுக்கு வழங்கப் படும்.
 நலிந்த பிரிவினருக்கு தொடக்கநிலை வகுப்புகளில், 25 சதவீத இடஒதுக்கீட்டை கடைபிடிக்காத தனியார் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த புதிய பாடத்திட்ட புத்தகங்கள் பள்ளி திறக்கும் நாட்களிலேயே மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றார்

Sunday, April 1, 2018

அ.மாயவன் சூளுரை - மே - 8 கோட்டை முற்றுகை

Sunday, 1 April 2018

முற்றுகை போர் மே 8--அ.மாயவன் சூளுரை..

*மே 8 ல் கோட்டை -சைதாப்பேட்டை வரை முற்றுகை போர்:*
நிறுவனர்  அ.மாயவன் அறிவிப்பு
       புதிய பென்சன் திட்டத்தை அடியோடு குழி தோண்டி புதைத்துவிட்டு பழைய பென்சன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்தக கோரி மே 8-ம் தேதி சென்னை கோட்டை முதல் சைதாப்பேட்டை வரை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனத் தலைவர் அ.மாயவன் அறிவித்துள்ளார்.
    மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்து நிறுவனர் அ. மாயவன் பேசியது:
   ஆசிரியர்களின் பிரச்சினைகளை அரசு தீர்த்து வைக்க வேண்டும்.  இந்த உயரிய லட்சியத்துடன், குறிக்கோளுடன் சங்கம் செயல்படுகிறது.
  சங்கத்துக்கு யார் தீங்கு விளைவித்தாலும், உரிமைக்கு மற்றும் வளர்ச்சிக்கு யார் தடையாக இருப்பினும் முட்டை ஓட்டுக்குள் கருவான கோழிக்குஞ்சு எவ்வாறு ஓட்டை
உடைத்துக்கொண்டு வெளியில் வருவதை போன்று நாமும் வெளியே வருவோம்.
    நமது கழகம் ஜாதி, மத பாகுபாடற்ற இயக்கம். நாம் அனைவரும் ஓர் தாய் வயிற்று பிள்ளைகள்.
   மனிதம் என்ற கயிற்றால் இணைந்துள்ளோம்.
நல்ல மணம் பரப்பும்  மலர்கள் இந்த மாவட்டத்தில் பூத்து குலுங்குகின்றன. அந்த மணம் அனைத்து பள்ளிகளில் கவ்வ வேண்டும்.
    22 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் உறுப்பினர்களை கொண்ட மாபெரும் கழகம் இது. அடுத்த தேர்தலில் உறுப்பினர் எண்ணிக்கை 30 ஆயிரமாக உயர அனைவரும் பாடுபட வேண்டும்.
    *இந்த இயக்கம் அரசாங்கத்தை எதிர்க்கக்கூடிய போர் வாள்.* இதர சங்கத்தினர் போல அரசோடு சமரசம் செய்துகொள்வதி ல்லை. கோரிக்கைகளை வென்றெடுப்பதே நமது குறிக்கோள்.
*மே 8 ம் தேதி சென்னை கோட்டையில் வாழ்வா? சாவா?  போராட்டம்.* சி.பி.எஸ். திட்டத்தை  குழி தோண்டி புதைக்கும் நாள்.
   ஜாக்டோ-ஜியோ *போராட்டத்தின் போது நமது சங்கப் பொறுப்பாளர்கள் 9 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டு 55 நாட்கள் வெளியில் இருந்தனர்.*
வேறு எந்த சங்கத்திலும் யாரையும்  இடைநீக்கம் செய்யவில்லை.
  விடைத்தாள் திருத்தும் உள்ளூர் உள்பட அனைத்து ஆசிரியர்களுக்கும் உழைப்பூதியம் உர்த்தி தர வேண்டும் என்ற கோரிக்கை வைத்திருந்தோம். இல்லை எனில் என் சட்டையை பிடித்து உலுக்குங்கள் என கேட் மீட்டிங்கில் பேசியிருந்தேன். *இப்படி எந்த சங்கமும் துணிச்சலாக பேசவில்லை.*
   இதற்காக உரிமை கொண்டாட வேண்டியவர்கள் நாம் தான். ஆனால் யார் யாரோ உரிமை கொண்டாடுவது வேடிக்கையாக உள்ளது.
   சி.பி.எஸ். திட்டத்தை ரத்து செய்ய, 21 மாத ஊதிய நிலுவைத் தொகையை அளிக்க அரசு நினைத்தால் வழங்கலாம். இல்லையெனில் எங்களை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்தினால் ஆலோசனை தருகிறோம்.
  இல்லை என்றால் மே 8 ம் தேதி சென்னை கோட்டை முதல் சைதாப்பேட்டை வரை முற்றுகை போராட்டம் நடத்தப்படும். அனைத்து ஆசிரியர்கள் சாரை சாரையாய்  வர வேண்டும். குதிரைப்படை, ராணுவப் படையை ஏவி விட்டாலும் கோரிக்கைகள் வெல்லும் வரை போராட்டம் ஓயாது என்றார் அவர்.
  

அமைச்சுப் பணியாளர்கள் முதுநிலை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறும் அரசாணையை உச்சநீதிமன்றம் சென்றேனும் தடுத்து நிறுத்துவோம் ஐயா மாயவன் ஆவேசம்

இன்று 05.06.21 தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செயற்குழு கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் ப...